எனக்கு அறுவை சிகிச்சை மருத்துவ ஒய்வு காலத்திற்குப்பின், தற்போது என்னுடடைய ஆக்கம் மற்றும் பராமரிப்பில் இருந்துவரும் எங்கள் ஊர் செட்டிகுளம் கரை மரக்கன்றுகள் பகுதி புத்தர் மண்டி கிடந்தது… அகற்றும் பணி மற்றும் பழுதான மரக்கன்றுகளை அகற்றி புதிய மரக்கன்றுகளை வைத்து கூண்டு அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை வட்டாரம் உதயமார்த்ஹாண்டபுரம் கடைத்தெருவில் உள்ள பிரதான குளம் (செட்டிகுளம்) 30 ஆண்டுகள் ஆக்கிரமிக்கபட்டு இருந்தபோது.
என்னுடைய தொடர் முயற்சியில் சட்டப் போராட்டத்தின் மூலம் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட புகைப்படம்.
ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு பாசன வாய்க்கால் தூர் வாரி என்னுடைய சொந்த முயற்சி மற்றும் சொந்த செலவில் குளத்திற்கு தண்ணீர் வைத்த போது எடுத்த படம்.
குளத்திற்கு தண்ணீர் வைத்தபின் குளத்தை சுற்றி குளக்கரையில் மரக்கன்றுகள் வைத்து கூண்டுகள் அமைத்த போது எடுத்த படம்.
மரக்கன்றுகள் வளர்ந்தபின் கூண்டுகளை பிரித்துவிட்டு குளக்கரை சுற்றி மரக்கன்றுகள் கம்பிவேலி சொந்த செலவில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த குளத்தை சுற்றி வைக்கப்பட்டுள்ள மரக் கன்றுகள் அனைத்தும் சொந்த செலவில் பராமரிக்கப்பட்டு வருகிறது.