
ஊருக்குள் ஒரு புதிய ஆறு…
திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை தாலுகா உதயமார்த்தாண்டபுரம் ஊராட்சியில் ஒரு கிலோமீட்டர் நீளமுள்ள நாச்சிகுளம் “வடிகால்”50 ஆண்டுகளுக்கு மேலாக ஆக்கிரமிக்கப்பட்டு, நீர்வழிப் பாதைகள் அடைக்கப்பட்டு வணிக வளாகங்கள் மிகப்பெரிய மாடி வீடுகள் கட்டப்பட்டு தண்ணீர் வடியாத நிலை ஏற்பட்டிருந்தது. என்னுடைய தீவிர முயற்சியால் அரசாணை எண்:540 ன் படி கடந்த 2018 ஜூலை 6, 7 தேதிகளில் அரசு அதிகாரிகளால் ஆக்கிரமிப்பு கட்டிடங்கள் இடிக்கப்பட்டன.
ஆனால் ஐந்து ஆண்டுகள் பல்வேறு முயற்சிகள் செய்தும் இடிக்கப்பட்ட கட்டிடங்கள் அப்புறப்படுத்தப்படாமலும் வடிகால் தூர்வாராமலும் இருந்து வந்த நிலையில், என்னுடைய சொந்த முயற்சியில் சொந்த பணத்தில் , கடந்த ஆண்டு 2023 ஜூலை 10ஆம் தேதி தொடங்கி ஜூலை 28ஆம் தேதி வரை 18 நாட்கள் இடைவிடாது தொடர்ந்து வடிகால் வெட்டும் பணி நடந்தது. மறுபடியும் திடீரென ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்த கடைகளும் இடிக்கப்பட்டன.
ஜூலை பத்தாம் தேதி தொடங்கிய வடிகால் வெட்டும் பணியை நீர்வளத்துறை உதவி செயற்பொறியாளர் திரு. சங்கர் அவர்களும், முத்துப்பேட்டை வட்டாட்சியர் திரு. மகேஷ் குமார் அவர்களும் முத்துப்பேட்டை காவல்துறை உதவி ஆய்வாளர் திரு. முத்துக்குமார் அவர்கள் தலைமையில் 25 க்கும் மேற்பட்ட காவலர்களும் கலந்து கொண்டனர்.

வடிகால் தூர் வாருவதற்கு முன்

நாச்சிகுளம் பழைய மீன் மார்க்கெட் அருகில் தூர் வாரும் பணி தொடங்கப்பட்டது

மீண்டும் உருவாகி இருந்த ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டது

தூர்வாரும் பணியை தொடக்கி வைத்து பார்வையிட வந்த நீர்வளத்துறை உதவி செயற்பொறியாளர் திரு. சங்கர், முத்துப்பேட்டை வட்டாட்சியர் திரு .மகேஷ் குமார், முத்துப்பேட்டை காவல் உதவி ஆய்வாளர் திரு . முத்துக்குமார் ஆகியோர்கள்

2023 ஜூலை 11 அன்று தினகரன் நாளிதழில் வெளிவந்த செய்தி

பழைய மீன் மார்க்கெட் அருகே ஆக்கிரமிப்புகளை பற்றி தூர் வாரிய பின்

நாச்சிகுளம் வடிகால் , கழனி ஆற்றில் கலக்கும் இடத்தில் 50 ஆண்டுகளாக தூர்வாராமல் இருந்த வடிகால், தூர் வாருவதற்கு முன்

தூர் வாரிய பின்

மில்லேனியம் மெட்ரிகுலேஷன் பள்ளி, நீர்வழிப் பாதையை அடைத்த ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டு துருவாரப்பட்டது.

நீர்வளத்துறை திருவாரூர் மாவட்ட செயற்பொறியாளர் திரு. ராஜேந்திரன் அவர்கள் பார்வையிட்டபோது

பழைய மதுரா பேங்க் முதல் பழைய மீன் மார்க்கெட் வரை புது ஆறும் புதிய ரோடும் உருவாக்கப்பட்டுள்ளது